Friday, April 30, 2010

உன்னைத் தேடி...

உன்னைத் தேடி உன்னைத் தேடி
அலைகின்றேன் தெய்வமே

உன்னைத் தேடி தேடி அலைந்தேன்
வாழும் தெய்வமே
உந்தன் ஒளியை என்று காண்பேன்
வாழ்வின் தெய்வமே - என்றும்
வாழும் தெய்வமே

உள்ளம் உண்மை நெறியில் சென்றால்
தெய்வம் தோன்றிடும்
அன்பில் அறிவை நாளும் வளர்த்தால்
நெஞ்சம் வாழ்ந்திடும்
நீதி இங்கு நிலைத்து நின்றால்
ஜோதி தெரிந்திடும்
உள்ளங்களே உள்ளங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்

விண்ணை நோக்கும் உந்தன் பார்வை
மண்ணில் திரும்பட்டும்
கண்ணில் புதிய ஒளியினைக் கொள்ளும்
எண்ணம் தோன்றட்டும்
புதிய வானம் புதிய பூமி காட்சி காணட்டும்
நெஞ்சங்களே நெஞ்சங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்

அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே!

அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே!
இந்த பூலோகம் உந்தன் சொந்தமே!!
நீயில்லாமலே இந்த உலகம் நடக்கிறது.
உன்னை கேட்காமலே இந்த இயற்கை வளர்கிறது.
இந்த வானம் பூமியும் காற்றும் காலமும்
காசில்லாமல் வந்தது - யார் தந்தது தெரியுமா?
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.

வாழும் பல ஆயிரம் உயிர்களின் ரகசியம்
அணுவினில் அமைத்தது யார்?
நாளும் வரும் ஆதவன் ஒளியினில்
அகிலமும் வாழ்ந்திட அமைத்தது யார்?
காற்று நடனமிடும் நாற்று
உயிரளிக்கும் ஊற்று எங்ஙனம்?
பாட்டு பல கலைகள் அழகு
வான்மழையின் அமுது எங்ஙனம்?
உலகெங்குமே உயிர் ஆற்றல்கள்!
நீ உணர்ந்திடு! உள்ளம் ஓளி பெறும்!!
யார் தந்தது தெரியுமா? சொல் மனமே!
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.

விதையில் பெரும் விருட்சமும் அடங்கிடும்
அதிசயம் அமைத்தது யார் அறிவு?
மண்ணில் பல மகத்துவம் மனிதனும்
படைத்திட அமைத்தது யார் அறிவு?
மாசு நிறையுலகில் கேட்கும்
மனக்குரலின் சாட்சி எங்ஙனம்?
பாசம் மனிதக்குல நேசம்
நீதியெனும் எண்ணம் எங்ஙனம்?
இவை வென்றிட நிலை நின்றிட
எழும் குரல்களும் மக்கள் இயக்கமும்!
யார் தந்தது தெரியுமா? சொல் மனமே!
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.

தாயின் கருவில் என்னை

தாயின் கருவில் என்னை அன்பு தேவன் அறிந்திருந்தார்!
வாழ்வில் உறவு தந்து எந்த நாளும் வளர்த்து வந்தார்!!
என்னென்ன ஆனந்தம்! என் நெஞ்சில் கண்டேனே!!
உன்னோடு நான் கண்ட சொந்தங்கள் எந்நாளும் வாழ்க!.
அந்த தேவன் தந்த வாழ்க்கை அழகானது!
வந்து போகும் இந்த நாட்கள் இனிதானவை - காணுதே என் மனம்.

வாராது வந்த வாழ்வினில் நான் காணும் வாலிபம்
வாழ்வாங்கு வாழ நீயுமே சொன்ன யாவும் நியாபகம்
ஒரு வழியில் ஆசைகள் மனித துயர் ஓசைகள்
இன்பங்களால் என் உலகமும் எழுவதை நான் காண வேண்டும் !
நெஞ்சோடு செய்த வேள்வியில் நான் காணும் கேள்விகள்
அஞ்சாது அன்று நீயுமே சென்ற பாதையின் தெளிவுகள்
அறநெறியில் ஆட்சியும் அன்புவழி வாழ்க்கையும்
ஓ தேவனே என் உலகினில் எழுவதை நான் காண வேண்டும்!