Sunday, August 24, 2014

நீர்தானே உயிர்கெல்லாம் முதலானவன்

நீரானவா! நிலமானவா !!
விண்ணானவா!!!  காற்றானவா!!!!
இறைவா.... ஒளியானவா!!!!!

நீர்தானே உயிர்கெல்லாம் முதலானவன்
நான் தேடும் உலகெல்லாம் உறவானவன்
ஜகம் கூடி ஜதி பாடும் இசையானவன்
எனை நாளும் தொடர்கின்ற நிழலானவன்

நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி 
பனியில் துளியாகும் இறையானவா
புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி
காற்றில் அசைந்தாடும் நிறைவானவா
வரம் வேண்டியே உனைப் பாடினேன்
நிஜம் கூடியே மகிழ்ந்தாடினேன்

சலங்கை ஒலியாக  சரிந்தாடும் மயிலாக
ஜதியில் உயிராக நடமாடினேன்
சபையில் இனிதாக இதம் தேடும் முகமாக
இதயம் கலந்தோரை புகழ்ந்தாடினேன்

என் வாழ்வின் வழி.. என் வழியின் ஒளி...

என் வாழ்வின் வழி என் வழியின்  ஒளி
நீரே இயேசையா! - 2
என் வாழ்வின் வழி.. என் வழியின்  ஒளி...
என் வாழ்வெல்லாம் நீர் இயேசையா...
உயிரே இறைவா!... உன் அருளின்றி நானேது!! 

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
அருகினில் நீயிருப்பாய் பயமேயில்லை...
அன்பே இறைவா  துணையாய் வருவாய்!
உயிரே உறவே என் இறைவா!!...

கலைமான்கள் தேடுகின்ற நீரோடையாய்
என்னோடு நீயிருக்க தவிப்பேயில்லை ...
அன்பே இறைவா அரணாய் வருவாய்!   
உயிரே உறவே என் இறைவா!!...

Sunday, June 20, 2010

அன்பென்ற நதி மீது படகாகு

அன்பென்ற நதி மீது படகாகு
அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகு
அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்

வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்
துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு
உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்
தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் காட்டு
நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்
பனி வேகந்தனில் இன்னும் பலம் ஊட்டு

அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு
இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு

மலர் வாசம் தரும் பூவில் இழப்பில்லை
மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை
தானே தன் கனி உண்ணும் செடி இல்லை
தனக்கென்றே வாழ்ந்தால் விண் விடிவில்லை
இளகாத மனம் செய்தல் பணி இல்லை
இறங்காத இதயத்தில் இறை இல்லை

தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்
அன்புள்ளம் இறை தந்த வரமாகும்

Saturday, May 29, 2010

உறவோடு வாழும்...

¯È§Å¡Î Å¡Øõ ¯ûÇí¸û ¿ÎÅ¢ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¯Ä¸¡Ùõ §¾Åý ¦¿È¢ Å¡Øõ þ¾Âõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ

Á¨È ÅƢ¢ø ÅÇÕõ þøÄí¸û ±øÄ¡õ

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¿¢¨È§Å¡Î ÁÄÕõ ¯Ä¸í¸û ¯¾¢ò¾¡ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

«ýÀ¡¸¢ «ýÀ¢ø ¿¢¨Ä¡Ìõ ¦¿ïº¢ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦Áö¡¸¢ ¦À¡ö¨Á ÀÆ¢ ¿£ìÌõ ¦¿È¢Â¢ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

´Ç¢Â¡¸¢ ¯Ä¸¢ø þÕû §À¡ìÌõ À½¢Â¢ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¸ÉÄ¡¸¢ ¿£¾¢ ¦¿ÕôÀ¡Ìõ ¦ºÂÄ¢ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

Á¾õ ¡×õ ÁÉ¢¾ þÉõ §À¾õ ´Æ¢ò¾¡ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

ºÁ¾÷Áõ µí¸ µÂ¡Ð ¯¨Æò¾¡ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¯¡¢¨Á¸û ¸¡ì¸ ¯Â¢÷ ¾¢Â¡¸õ ¦ºö¾¡ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

þ¨ÈÂú¢ý ¸É× ¿ÉÅ¡¸¢ Å¢Êó¾¡ø

¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

¦¾öÅõ ¾¡¢ºÉõ ¦¾öÅõ ¾¡¢ºÉõ

உலகமெல்லாம் எனக்கு ஆதாயம்

உலகமெல்லாம் எனக்கு ஆதாயம்
என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்கு ஆதாயம்
என வாழ்ந்தால் கவலையில்லை
அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவை காப்பதா
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவி நாடுகிறோம்
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் எதுவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான்

Friday, April 30, 2010

உன்னைத் தேடி...

உன்னைத் தேடி உன்னைத் தேடி
அலைகின்றேன் தெய்வமே

உன்னைத் தேடி தேடி அலைந்தேன்
வாழும் தெய்வமே
உந்தன் ஒளியை என்று காண்பேன்
வாழ்வின் தெய்வமே - என்றும்
வாழும் தெய்வமே

உள்ளம் உண்மை நெறியில் சென்றால்
தெய்வம் தோன்றிடும்
அன்பில் அறிவை நாளும் வளர்த்தால்
நெஞ்சம் வாழ்ந்திடும்
நீதி இங்கு நிலைத்து நின்றால்
ஜோதி தெரிந்திடும்
உள்ளங்களே உள்ளங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்

விண்ணை நோக்கும் உந்தன் பார்வை
மண்ணில் திரும்பட்டும்
கண்ணில் புதிய ஒளியினைக் கொள்ளும்
எண்ணம் தோன்றட்டும்
புதிய வானம் புதிய பூமி காட்சி காணட்டும்
நெஞ்சங்களே நெஞ்சங்களே
உணர்ந்து கொள்ளுங்கள் - இன்று
உணர்ந்து கொள்ளுங்கள்

அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே!

அன்பைக் கொண்டாடு எந்தன் நெஞ்சமே!
இந்த பூலோகம் உந்தன் சொந்தமே!!
நீயில்லாமலே இந்த உலகம் நடக்கிறது.
உன்னை கேட்காமலே இந்த இயற்கை வளர்கிறது.
இந்த வானம் பூமியும் காற்றும் காலமும்
காசில்லாமல் வந்தது - யார் தந்தது தெரியுமா?
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.

வாழும் பல ஆயிரம் உயிர்களின் ரகசியம்
அணுவினில் அமைத்தது யார்?
நாளும் வரும் ஆதவன் ஒளியினில்
அகிலமும் வாழ்ந்திட அமைத்தது யார்?
காற்று நடனமிடும் நாற்று
உயிரளிக்கும் ஊற்று எங்ஙனம்?
பாட்டு பல கலைகள் அழகு
வான்மழையின் அமுது எங்ஙனம்?
உலகெங்குமே உயிர் ஆற்றல்கள்!
நீ உணர்ந்திடு! உள்ளம் ஓளி பெறும்!!
யார் தந்தது தெரியுமா? சொல் மனமே!
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.

விதையில் பெரும் விருட்சமும் அடங்கிடும்
அதிசயம் அமைத்தது யார் அறிவு?
மண்ணில் பல மகத்துவம் மனிதனும்
படைத்திட அமைத்தது யார் அறிவு?
மாசு நிறையுலகில் கேட்கும்
மனக்குரலின் சாட்சி எங்ஙனம்?
பாசம் மனிதக்குல நேசம்
நீதியெனும் எண்ணம் எங்ஙனம்?
இவை வென்றிட நிலை நின்றிட
எழும் குரல்களும் மக்கள் இயக்கமும்!
யார் தந்தது தெரியுமா? சொல் மனமே!
இறைவன் இறைவன் இறைவன்!
ஒருவன் அவனே தலைவன்!!.