Sunday, August 24, 2014

நீர்தானே உயிர்கெல்லாம் முதலானவன்

நீரானவா! நிலமானவா !!
விண்ணானவா!!!  காற்றானவா!!!!
இறைவா.... ஒளியானவா!!!!!

நீர்தானே உயிர்கெல்லாம் முதலானவன்
நான் தேடும் உலகெல்லாம் உறவானவன்
ஜகம் கூடி ஜதி பாடும் இசையானவன்
எனை நாளும் தொடர்கின்ற நிழலானவன்

நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி 
பனியில் துளியாகும் இறையானவா
புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி
காற்றில் அசைந்தாடும் நிறைவானவா
வரம் வேண்டியே உனைப் பாடினேன்
நிஜம் கூடியே மகிழ்ந்தாடினேன்

சலங்கை ஒலியாக  சரிந்தாடும் மயிலாக
ஜதியில் உயிராக நடமாடினேன்
சபையில் இனிதாக இதம் தேடும் முகமாக
இதயம் கலந்தோரை புகழ்ந்தாடினேன்

No comments:

Post a Comment